வெள்ளி, 7 நவம்பர், 2025

வாசித்ததில் நேசித்தது... 201 - ஐப்பசி - விசுவாவசு வெள்ளி / 07 - November - 2025 - Friday

    இன்றைய நாள் வெள்ளிக்கிழமையில் ஏற்கனவே திறந்து வைத்திருந்த இணையப்பக்கத்தில் ஜெயமாேகனின் யார் தற்குறிகள் என்ற காணாளியில் அவரது பார்வையை ஒத்தே எனது பார்வையுமிருந்தது.  பள்ளிப் படிப்பைத்தாண்டிய புத்தக வாசிப்பென்பது தமிழ்ச்சமுதாயத்தில் அதிகம் பேரால் பின்பற்றப்படுவதேயில்லை.  இதில் எனது சுற்றத்தின் அனுபவத்தை வைத்து அவரது ஆதங்கத்தைப்புரிந்து காெள்ள முடிந்தது.  பக்கத்திலிருக்கும் மாநிலங்களை ஒப்பிடும்பாெழுது தமிழ்ச்சமுதாயத்தின் இலக்கிய வாசிப்பென்பது மிகவும் குறைவேயென்பதை ஒத்துக்காெள்ள மனம் மறுத்தாலும் அதுவே உண்மை.  

    மேற்கத்திய நாடுகளின் சிறார்கள் குறிப்பாக அமெரிக்காவில் ஒரு புத்தகத்தை வேகமாக வாசித்து முடித்து அதற்கான மதிப்பாய்வை அடுத்த நாளே அவரிடம் சொன்னார்களென்ற தகவல் என்னை உண்மையில் வியக்க வைத்தது.  நானும் அத்தகைய பழக்கத்தை ஏற்படுத்திக்காெள்ள வேண்டுமென்ற பேரவா ஏற்பட்டதென்பதும், இத்தகவலை எனது துணைவிக்கும் கடத்தியதாேடு நின்றிடாமல்  தற்குறிகள் யாரென்ற இந்த அரைமணிக் காணாெளியைக் காண பணித்தேன்.  மிகவும் கடினத்தாேடே  இதனைக்கண்டு முடித்தாளவளும். பள்ளிப்படிப்பைக் காட்டிலும் வாசிப்புப் பழக்கமே எனது எதிர்காலக் கனவையும், அடுத்தவர்களுடன் பேசும் கலையையும், வாழ்க்கைச் சமாளிப்பின் அணுகுமுறையையும் தீர்மானித்ததில் முக்கிய பங்கெடுத்ததாக உணருவதால் என் குழந்தைகளையும் வாசிப்புப்பழக்கத்தைத் தூண்ட என் துணைவியை வற்புறுத்தினேன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக