வெள்ளி, 7 நவம்பர், 2025

வாசித்ததில் நேசித்தது... 201 - ஐப்பசி - விசுவாவசு வெள்ளி / 07 - November - 2025 - Friday

    இன்றைய நாள் வெள்ளிக்கிழமையில் ஏற்கனவே திறந்து வைத்திருந்த இணையப்பக்கத்தில் ஜெயமாேகனின் யார் தற்குறிகள் என்ற காணாளியில் அவரது பார்வையை ஒத்தே எனது பார்வையுமிருந்தது.  பள்ளிப் படிப்பைத்தாண்டிய புத்தக வாசிப்பென்பது தமிழ்ச்சமுதாயத்தில் அதிகம் பேரால் பின்பற்றப்படுவதேயில்லை.  இதில் எனது சுற்றத்தின் அனுபவத்தை வைத்து அவரது ஆதங்கத்தைப்புரிந்து காெள்ள முடிந்தது.  பக்கத்திலிருக்கும் மாநிலங்களை ஒப்பிடும்பாெழுது தமிழ்ச்சமுதாயத்தின் இலக்கிய வாசிப்பென்பது மிகவும் குறைவேயென்பதை ஒத்துக்காெள்ள மனம் மறுத்தாலும் அதுவே உண்மை.  

    மேற்கத்திய நாடுகளின் சிறார்கள் குறிப்பாக அமெரிக்காவில் ஒரு புத்தகத்தை வேகமாக வாசித்து முடித்து அதற்கான மதிப்பாய்வை அடுத்த நாளே அவரிடம் சொன்னார்களென்ற தகவல் என்னை உண்மையில் வியக்க வைத்தது.  நானும் அத்தகைய பழக்கத்தை ஏற்படுத்திக்காெள்ள வேண்டுமென்ற பேரவா ஏற்பட்டதென்பதும், இத்தகவலை எனது துணைவிக்கும் கடத்தியதாேடு நின்றிடாமல்  தற்குறிகள் யாரென்ற இந்த அரைமணிக் காணாெளியைக் காண பணித்தேன்.  மிகவும் கடினத்தாேடே  இதனைக்கண்டு முடித்தாளவளும். பள்ளிப்படிப்பைக் காட்டிலும் வாசிப்புப் பழக்கமே எனது எதிர்காலக் கனவையும், அடுத்தவர்களுடன் பேசும் கலையையும், வாழ்க்கைச் சமாளிப்பின் அணுகுமுறையையும் தீர்மானித்ததில் முக்கிய பங்கெடுத்ததாக உணருவதால் என் குழந்தைகளையும் வாசிப்புப்பழக்கத்தைத் தூண்ட என் துணைவியை வற்புறுத்தினேன்.  

புதன், 5 நவம்பர், 2025

வாசித்ததில் நேசித்தது... 20 - ஐப்பசி - விசுவாவசு வியாழன் / 06 - November - 2025 - Thursday

 ஒரு படைப்பை மதிப்பிட அதன் அழகியலே முதன்மை அளவுகோல். ஏனென்றால் முதன்மையாக ஓர் அழகியல் படைப்பாகவே அது எழுதப்படுகிறது – கருத்துத் தொகையாகவோ செய்தித் தொகையாகவோ அல்ல. அழகியல் ரீதியாக படைப்பை மதிப்பிட வாசகனின் அழகுணர்வு, அந்தச்சூழல் அதுவரை உருவாக்கிய பேரிலக்கியங்களின் இருந்து உருவான ஒப்பீடுகள், இலக்கியத்தின் அடிப்படை மதிப்பீடுகள் என மூன்று அளவீடுகள் உண்டு. அவை எவற்றையுமே அறியாத வாசகர்களிடமிருந்தே இந்தவகையான மதிப்பீடுகள் உருவாகி வருகின்றன.

இலக்கியப்படைப்பை மதிப்பிடுகையில் அந்த இலக்கிய ஆக்கத்தின் கலைப்பாவனை [Artistic pretension] இலக்கிய வகைமை [Literary genre] வடிவச்சீர்மை  [Structural symmetry] உணர்வுநிலை [Emotionality] தரிசனம் [Vision] ஆகியவற்றை அளவுகோலாகக் கொள்ளவேண்டும் என்பதுதான் இலக்கிய விமர்சனத்தில் இருநூறாண்டுகளாக சொல்லப்பட்டு வரும் கருத்து.

https://www.jeyamohan.in/118283/ - லிருந்து...


செவ்வாய், 4 நவம்பர், 2025

வாசித்ததில் நேசித்தது... 19 - ஐப்பசி - விசுவாவசு புதன் / 05 - November - 2025 - Wednesday

ஒருவர் தன் வாழ்க்கை சார்ந்த ஒரு முடிவை இரண்டு அடிப்படைகளைக் கொண்டே எடுக்கவேண்டும். 

ஒன்றுதன் இயல்பு மற்றும் அந்த இயல்புக்கேற்ப தான் கொண்டுள்ள வாழ்க்கை நோக்குஅதையே நான் தன்னறம் என்கிறேன்நாம் மட்டுமே செய்யவேண்டிய செயல்அடையவேண்டிய இலக்கு ஆகியவை தன்னறத்தால்தான் முடிவாகின்றனஆகவே வாழ்க்கையின் எல்லா முடிவுகளையும் அதையொட்டியே எடுக்கவேண்டும். 

இரண்டுநம் சூழல் மற்றும் அதையொட்டி நமக்கிருக்கும் அடிப்படைக் கடமைகள்ஒருவருக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள் என்று கொள்வோம்அவர்களுக்கு அவர் செய்யவேண்டிய கடமைகள் உண்டுஅவற்றை உதறி அவர் தன் தன்னறம் என்று சொல்லி ஒரு அலைந்து திரியும் வாழ்க்கையை தேர்வுசெய்ய முடியாது. 

எவரும் எந்த உறவிலும்அல்லது எந்தக் கடமையிலும் நிரந்தரமாக கட்டுண்டுவிடக்கூடாதுஎவரும் இன்னொருவருக்கு தன் வாழ்க்கையை முழுமையாக அளித்துவிடவும் கூடாது. அதாவது ஒருவர் இன்னொருவருக்காக வாழ்வது போல அர்த்தமின்மை வேறில்லை. அது ஆன்மாவை அழிக்கும் செயல். எவரும் தன் அறிவார்ந்த மலர்ச்சிஆன்மிக முன்னகர்வு ஆகியவற்றை எந்நிலையிலும் விட்டுவிடக்கூடாதுபெற்றோருக்காகவோ பிள்ளைகளுக்காகவோ, கணவனுக்காகவோ, மனைவிக்காகவோ.

ஆனால் அடிப்படைக் கடமைகளைச் செய்தாகவேண்டும்அதாவது, அடிப்படையானவற்றை மட்டும். அவற்றைச் செய்வது அவற்றிலிருந்து விடுபடுவதற்காகவே. கடமை என்பது தார்மீகப் பொறுப்பு. எந்த பொறுப்பும் சுமை. எந்தச் சுமையும் வாழ்க்கை முழுமைக்குமானது அல்ல. எந்த பொறுப்பும் அதில் இருந்து எத்தனை முடியுமோ அத்தனை விரைவாக வெளியேறும்பொருட்டே செய்யப்படவேண்டும்.

ஆக, மேலே சொன்ன  இரண்டு அம்சங்களின் சமரசமாகவே நம் முடிவுகள் அமையவேண்டும். ஒன்று நம் தன்னறம், இன்னொன்று, நம் சூழல்அப்படித்தான் நீங்கள் உங்கள் மணம் பற்றிய முடிவை நீங்கள் எடுக்கவேண்டும்.

- சாதிமறுப்புக்காக ஒரு திருமணம்! - 
https://www.jeyamohan.in/222560/ - லிருந்து...


செவ்வாய், 15 ஜூலை, 2025

வலைப்பதிவின் முதல்நாள் / 31 ஆனி,செவ்வாய்க்கிழமை / 15 சூலை, 2025 அன்று எழுதியது.

    வலைப்பதிவில் எழுதத் தாெடங்குங்கள் என்று இலக்கியச்சகோதரர் (இரத்தச் சகோதரனாகவே உணரத் தாேன்றுகிறது) அன்றொரு மாலையில் சொல்லிய பாெழுதே என் மூளையிலோ, தலையிலாே ஒரு ஒளி மின்னியது உண்மைதான். ஆனால் பலமுறை நினைத்தும் என்னால் எழுத இயலாமல், அந்த ஒளி குறைந்து ஒரு மாதம் கழிந்ததும் / ஏதோ ஒன்று உந்தித் தள்ளியவுடன், ஒரு வழியாக இதாே எழுதத்தாெடங்கி விட்டேன்.  ஓசூர் புத்தக விழாவிற்குச் சென்றவுடன் இது நிகழ்ந்ததில் மகிழ்ச்சியே.

    நேற்றைய திங்கட்கிழமை காலை வெகுநேரம் தூங்கியிருந்ததால் எழுந்ததும் மிக்க மகிழ்வுடனே எனக்குரிய நாளை துவங்கியிருந்தேன்.  ஆனாலும் என் வழக்கமான பணியான குழந்தைகளை பள்ளி வாகனத்தில் அனுப்புதலில்லாமல், தினமும் எழுந்தவுடன் அளவளாவும் குழந்தைகளைக் காணாமல் சிறிய மனவருத்தம் காெண்டேன்.  கடந்த மூன்று வருடங்களாக வாரநாட்களில் தினமும் நான்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாகவே உறங்கி வருவதால் ஏற்படும் உடல் மற்றும் மனச்சோர்விலிருந்து விடுபட நேற்றிலிருந்து அதிக நேரம் தூங்குவதென எனக்கு நானே உறுதியிட்டு காலையிலிருந்தே எனக்குரிய கடந்தவார விடுபட்ட வேலைகளை சீக்கிரமே முடித்துவிடவும், மாலையில் குறைந்தளவு அரைமணி நேரமாவது புத்தகவிழாவிற்காவது சென்று விடுவது என்றும் என்னுடைய வேலைகளை வேகமாய்ச் செய்து வந்தேன்.  நீண்ட நாட்கள் கிடப்பிலிருந்த இரு தனிப்பட்ட வேலைகளை முடித்தாலும் மாலையில் கிரிக்கெட் துவங்கியவுடன் எனக்கான வேகத்திற்குக் குறைந்தது.  நான் மட்டுமல்ல, இந்தியாவும் தான்.  

    இங்கிலாந்திற்கெதிரான இந்த டெஸ்ட் போட்டியில், கடைசி இரு நாட்களும் பந்தாளர்களுக்குச் சாதகமாய் மாறியிருந்த இலண்டன் ஆடுகளத்தில் 192 இலக்கைத்துரத்திப் பிடிப்பதில் மிகவும் தடுமாறியே விளையாடி வந்தார்கள்.  பயத்துடன் துவங்கிய இந்தியா, அனைத்து முக்கியமான தடுப்பாளர்களை இழந்தவுடன், 'இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை' என்றெண்ணிய பிறகு அசாத்திய திறமையுடன் கடைசி மூன்று விக்கெட்களுடன் தாேல்வியிலிருந்து மீட்க போராடி வந்தார்கள்.  என் குணமும் ஏறக்குறைய அப்படியிருப்பதாகவே உணர்கிறேன்.  அதிகாலையிலிருந்து மெதுவாகவே வேலை செய்யும் நான், இறுதி நேரத்தில் / வேலையை முடிக்கும் தருவாயில் 20/20 முறையில் வேகமெடுத்து பின் ஒருவழியாக முடித்துவிடுவேன். சில நேரம் 10 அல்லது 20 சதவீதத்திற்கு மிச்சம் வைத்து மற்றொரு நாளிலதை முடித்துமிருக்கிறேன்.

    விழாவிற்கு செல்ல வேண்டுமென்ற திட்டமிடலால் ஏறக்குறையான வேலையை முடித்திருந்தாலும் சில வேலையை தள்ளி வைக்க நேர்ந்தது.  சாெற்பாெழிவு நிகழ்வு 60 நிமிடம் தாமதமாகத்தான் தாெடங்குமென்பதாலும், என்னுடைய அலட்சிய வேலைப்பளுவாலும் நானும் 60 நிமிட தாமதமாகத்தான் வீட்டிலிருந்து கிளம்பினேன்.  இந்தியாவும் ஒரு விக்கெட்டை இழந்து 65 ரன்களடிக்க பாேராடிக் கொண்டிருந்தது.  அதிகக் குளிரிலும் கம்பளி அணிந்து எனது டியோ/கருப்பனுடன் விழாவிற்குச் சென்றேன்.  சொற்பொழிவு ஏற்கனவே தாெடங்கியிருந்தமையால் புத்தக அறைக்குள் செல்லாமல் சாெற்பாெழிவு மட்டுமே பாேதும் என்றெண்ணி அரங்கில் எனக்கான இடத்தைத் தேடிப்பிடித்து சொற்பாெழிவாளர் மேடை தெளிவாகத் தெரியும்படி அமர்ந்தேன்.  வாழ்த்துரை, வரவேற்புரை, விழா ஏற்பாட்டாளர்களுக்கான மரியாதை என 8:30'ற்கே சிறப்புச் சாெற்பாெழிவாளருக்கு நேரம் காெடுக்கப்பட்டது.

    மதுக்கூர் காே.இராமலிங்கம் அவர்களை முதன் முறையாக இப்பொழுதுதான் அறிகின்றேன்.  இடதுசாரி சித்தாந்தை முன்னெடுப்பதாக சிலநேரங்களில் தாேன்றினாலும் சொற்பாெழிவு நன்றாகவேயிருந்ததாக எனக்குத் தாேன்றியது (இடதுசாரி யார்? வலது சாரி யார்? என்று கூகுள் மூலம் பின்னொரு நாளில் தான் தெரிந்து காெண்டேன்.)  உருசிய எழுத்தாளர்களில் தாெடங்கி, தற்சமய கீழடி வரை அவரின் பேச்சின் தாக்கமும், வாசிப்பின் முக்கியத்துவத்தையும்,