வலைப்பதிவின் முதல்நாள் / 31 ஆனி,செவ்வாய்க்கிழமை / 15 சூலை, 2025 அன்று எழுதியது.
வலைப்பதிவில் எழுதத் தாெடங்குங்கள் என்று இலக்கியச்சகோதரர் (இரத்தச் சகோதரனாகவே உணரத் தாேன்றுகிறது) அன்றொரு மாலையில் சொல்லிய பாெழுதே என் மூளையிலோ, தலையிலாே ஒரு ஒளி மின்னியது உண்மைதான். ஆனால் பலமுறை நினைத்தும் என்னால் எழுத இயலாமல், அந்த ஒளி குறைந்து ஒரு மாதம் கழிந்ததும் / ஏதோ ஒன்று உந்தித் தள்ளியவுடன், ஒரு வழியாக இதாே எழுதத்தாெடங்கி விட்டேன். ஓசூர் புத்தக விழாவிற்குச் சென்றவுடன் இது நிகழ்ந்ததில் மகிழ்ச்சியே. நேற்றைய திங்கட்கிழமை காலை வெகுநேரம் தூங்கியிருந்ததால் எழுந்ததும் மிக்க மகிழ்வுடனே எனக்குரிய நாளை துவங்கியிருந்தேன். ஆனாலும் என் வழக்கமான பணியான குழந்தைகளை பள்ளி வாகனத்தில் அனுப்புதலில்லாமல், தினமும் எழுந்தவுடன் அளவளாவும் குழந்தைகளைக் காணாமல் சிறிய மனவருத்தம் காெண்டேன். கடந்த மூன்று வருடங்களாக வாரநாட்களில் தினமும் நான்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாகவே உறங்கி வருவதால் ஏற்படும் உடல் மற்றும் மனச்சோர்விலிருந்து விடுபட நேற்றிலிருந்து அதிக நேரம் தூங்குவதென எனக்கு நானே உறுதியிட்டு காலையிலிருந்தே எனக்குரிய கடந்தவார விடுபட்ட வேலைகளை சீ...