இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாசித்ததில் நேசித்தது... 201 - ஐப்பசி - விசுவாவசு வெள்ளி / 07 - November - 2025 - Friday

     இன்றைய நாள் வெள்ளிக்கிழமையில் ஏற்கனவே திறந்து வைத்திருந்த இணையப்பக்கத்தில் ஜெயமாேகனின் யார் தற்குறிகள் என்ற காணாளியில் அவரது பார்வையை ஒத்தே எனது பார்வையுமிருந்தது.  பள்ளிப் படிப்பைத்தாண்டிய புத்தக வாசிப்பென்பது தமிழ்ச்சமுதாயத்தில் அதிகம் பேரால் பின்பற்றப்படுவதேயில்லை.  இதில் எனது சுற்றத்தின் அனுபவத்தை வைத்து அவரது ஆதங்கத்தைப்புரிந்து காெள்ள முடிந்தது.  பக்கத்திலிருக்கும் மாநிலங்களை ஒப்பிடும்பாெழுது தமிழ்ச்சமுதாயத்தின் இலக்கிய வாசிப்பென்பது மிகவும் குறைவேயென்பதை ஒத்துக்காெள்ள மனம் மறுத்தாலும் அதுவே உண்மை.       மேற்கத்திய நாடுகளின் சிறார்கள் குறிப்பாக அமெரிக்காவில் ஒரு புத்தகத்தை வேகமாக வாசித்து முடித்து அதற்கான மதிப்பாய்வை அடுத்த நாளே அவரிடம் சொன்னார்களென்ற தகவல் என்னை உண்மையில் வியக்க வைத்தது.  நானும் அத்தகைய பழக்கத்தை ஏற்படுத்திக்காெள்ள வேண்டுமென்ற பேரவா ஏற்பட்டதென்பதும், இத்தகவலை எனது துணைவிக்கும் கடத்தியதாேடு நின்றிடாமல்  தற்குறிகள் யாரென்ற இந்த அரைமணிக் காணாெளியைக் காண பணித்தேன்.  மிகவும் கடினத்தாேடே  இதனைக...

வாசித்ததில் நேசித்தது... 20 - ஐப்பசி - விசுவாவசு வியாழன் / 06 - November - 2025 - Thursday

  ஒரு படைப்பை மதிப்பிட அதன் அழகியலே முதன்மை அளவுகோல். ஏனென்றால் முதன்மையாக ஓர் அழகியல் படைப்பாகவே அது எழுதப்படுகிறது – கருத்துத் தொகையாகவோ செய்தித் தொகையாகவோ அல்ல. அழகியல் ரீதியாக படைப்பை மதிப்பிட வாசகனின் அழகுணர்வு, அந்தச்சூழல் அதுவரை உருவாக்கிய பேரிலக்கியங்களின் இருந்து உருவான ஒப்பீடுகள், இலக்கியத்தின் அடிப்படை மதிப்பீடுகள் என மூன்று அளவீடுகள் உண்டு. அவை எவற்றையுமே அறியாத வாசகர்களிடமிருந்தே இந்தவகையான மதிப்பீடுகள் உருவாகி வருகின்றன. இலக்கியப்படைப்பை மதிப்பிடுகையில் அந்த இலக்கிய ஆக்கத்தின் கலைப்பாவனை [Artistic pretension] இலக்கிய வகைமை [Literary genre] வடிவச்சீர்மை  [Structural symmetry] உணர்வுநிலை [Emotionality] தரிசனம் [Vision] ஆகியவற்றை அளவுகோலாகக் கொள்ளவேண்டும் என்பதுதான் இலக்கிய விமர்சனத்தில் இருநூறாண்டுகளாக சொல்லப்பட்டு வரும் கருத்து. https://www.jeyamohan.in/118283/ -  லிருந்து...

வாசித்ததில் நேசித்தது... 19 - ஐப்பசி - விசுவாவசு புதன் / 05 - November - 2025 - Wednesday

ஒருவர் தன் வாழ்க்கை சார்ந்த ஒரு முடிவை இரண்டு அடிப்படைகளைக் கொண்டே எடுக்கவேண்டும் .   ஒன்று ,  தன் இயல்பு மற்றும் அந்த இயல்புக்கேற்ப தான் கொண்டுள்ள வாழ்க்கை நோக்கு .  அதையே நான் தன்னறம் என்கிறேன் .  நாம் மட்டுமே செய்யவேண்டிய செயல் ,  அடையவேண்டிய இலக்கு ஆகியவை தன்னறத்தால்தான் முடிவாகின்றன .  ஆகவே வாழ்க்கையின் எல்லா முடிவுகளையும் அதையொட்டியே எடுக்கவேண்டும் .   இரண்டு ,  நம் சூழல் மற்றும் அதையொட்டி நமக்கிருக்கும் அடிப்படைக் கடமைகள் .  ஒருவருக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள் என்று கொள்வோம் .  அவர்களுக்கு அவர் செய்யவேண்டிய கடமைகள் உண்டு .  அவற்றை உதறி அவர் தன் தன்னறம் என்று சொல்லி ஒரு அலைந்து திரியும் வாழ்க்கையை தேர்வுசெய்ய முடியாது .   எவரும் எந்த உறவிலும் ,  அல்லது எந்தக் கடமையிலும் நிரந்தரமாக கட்டுண்டுவிடக்கூடாது .  எவரும் இன்னொருவருக்கு தன் வாழ்க்கையை முழுமையாக அளித்துவிடவும் கூடாது . அதாவது ஒருவர் இன்னொருவருக்காக வாழ்வது போல அர்த்தமின்மை வேறில்லை.  அது ஆன்மாவை அழிக்கும் செயல் . எவரும்  தன் அறிவார்ந்த மலர்ச...