R & D of Baby Tamil Names - Baby Boy
வெற்றிவேல் செழியன் - முதலாம் பாண்டிய மன்னர்களிலொருவர். தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் - மதுரை மாங்குளம் கல்வெட்டு (கி.மு. 3ஆம் நுாற்றாண்டு) - தமிழி கல்வெட்டு பாண்டிய மன்னர்களின் பெயர்கள்: 1. முற்காலப்பாண்டியர்கள் : குமரி நாடு கி.மு. 600, 2600 வருடங்களுக்கு முன்பு வடிம்பலம்ப நின்ற பாண்டியன் (நெடியாேன்) - பஃறுளி ஆறோடிய நாட்டிலாட்சி, கடல் தெய்வத்திற்கு விழா எடுத்த மன்னன். புறநானுாற்றுப்பாடலாதாரம். முதுக்குடும்பி பெருவழுதி ( பல்யாகசாலை) - ஆயிரம் வேள்விகள் நடத்தியவர், பிற்காலச்செப்பேடுகள் மற்றும் புறநானுாற்றுப்பாடலாதாரம். 2. கடைச்சங்க பாண்டியர்கள் - மாறன், வழுதி, செழியன் இந்த மூன்று பெயர்களால் மாறி மாறி அழைக்கப்படுவதுண்டு. 49 மன்னர்கள். 10 மாமன்னர்கள் பற்றிய குறிப்பு, மற்றவர்களின் பெயர் தெரிந்திருந்தும் வரலாற்றுக்குறிப்புகளேதுமில்லை. பாண்டியன் முடத்திருமாறன் (தென்மதுரையும், கபாடபுரமும் கடற்கோள் கொண்டுவிட்ட பிறகு, மதுரையைத் தலைநகராகக் உருவாக்கிக் காெண்டு ஆட்சி செய்த மன்னர். இவர் மதுரையிலாரம்பித்தத...